Posts

Showing posts from December, 2016

மூழ்கிவிடாதீர்கள்....!

Image
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் மலர்ச்சியும், சமூக வலைதளங்களின் வளர்ச்சியும் வேகத்தை அளித்து,நம் விவேகத்தை பறிப்பது ச ரியா? இதனால் நம் உடல் நிலையிலும் நம் உள நிலையிலும் பல பாதிப்புகள். உறவுகளிடையும் பல பிரச்சனைகள். அது மட்டும் அல்ல, இதனால் பல பல பிரச்சனைகள் நம்மை தேடி வரிசையில் வந்துகொண்டிருக்கிறது. இது தேவைதானா? இந்த தொழில்நுட்பம் நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. இந்தப்பிரச்சனைக்கான தீர்வுகள்தான் என்ன? இதைப் பற்றிய  பார்வையை சில நகைச்சுவை சான்றுகளுடன் பகிர்ந்துள்ளேன். ஆதிகாலத்தில் பறைதான் முதல் தகவல் தொடர்பு சாதனம், அதனை அடுத்து புறா விடு தூது, அடுத்து ஒற்றையர் மூலம் செய்தி அனுப்புவது, பிறகு அஞ்சல்,தொலைபேசி,இப்போ கணினி மற்றும் ஸ்மார்ட் போன்.ஆனால் அன்று இருந்த உண்மையான அன்பையும்,அக்கறையையும் தொலைத்துவிட்டு அதை நாம் இன்று இயந்திரமாக தேடிக்கொண்டிருக்கிறோம்….. நிலவுக்குச் செல்லும்வரை நம் தொழில்நுட்பம் வளர்ந்திருப்பதை நான் மறக்கவில்லை. ஆனால், பக்கத்து வீட்டுல யார் இருக்கா என்பதுகூட தெரியாத அளவுக்கு மக்கா போயிட்டோமே! காசுக்கு தண்ணீரையும் இலவசமாக சிம்...