இருளிலும் ஒளி வீசு


இருளிலும் பெறு ஒளி பிறக்கும்!

பயன்படாத எதுவும்
பழுதாகித்தான் போகும்-அதற்கு
உழைப்பினால் வரும்
தேய்மானம் சிறப்பானதேயாகும்.

தடைகளால் தயங்காதே!
தடைகளை தகர்த்திடு!
கவலையை கரைத்திடு!
உன் உன்னத வினைகளை
உலகில் விதைத்திடு!

உழைப்பும் உற்சாகமும்
உன்னில் இருந்தால்,
புதுமை புகுத்திட
மீண்டும் பிறக்கலாம்!

வளர்ந்து பிறப்பது
வாரிசுரிமை!
பிறந்து வளர்வதுதான்
பிறப்பின் பெருமை!

துன்பங்களையும்,
துயரங்களையும்
காரணம் காட்டி
கால காலனிடம்
இரையாகாதே!
உலகின் உபாதைகள்
கண்டு...பயப்படாதே!
உள்ளத்தின் கவலையிலிருந்து
மீண்டு...
உன் உயர்வான இலக்கினைத்
தூண்டு...

இருளிலும் பெறு ஒளி பிறக்கும்!
ஆம் ..!
இருளிலும் ஒளி வீசும்
நிலவாய் இரு..
இதுவே இக்கவிதையின்
இறுதிக் கரு..

Comments

  1. கவிதை மிகவும் உள்கருத்து இன்றி உள்ளது... எளிய சந்தநடை தந்து எழுதினால் வெளிப்படையாக தெரியும் கருத்து சற்றுசுவை மிக்க மாறும்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பொங்கல் நினைவுகள்

களவும் கற்று மற என்பது தவறு