களவும் கற்று மற என்பது தவறு
அதென்ன களவும் கற்று மற...ஏதாவது ஒரு தீய பழக்கத்தில இருக்கறவங்கட்ட,ஏம்பா... இதலாம் எதுக்கு? இதலாம் தப்புனு சொன்னா..ஈசியா சொல்றதுக்கு ஒரு பதில் பக்கத்துலயே வச்சிருக்காங்க..அதுதான் இந்த களவும் கற்று மற..அவங்கள்ட நான் நேரடியாகவே கேக்குறேன்...
களவுனு தெரிந்த ஒரு செயல அதும் மறக்க வேண்டிய ஒரு செயல எதுக்கு கத்துக்கனும்.
அத கத்துக்கிட்டு நேரத்த வீணடிப்பதா..அதுக்கு கத்துக்காமலே இருக்கலாம்.
இந்த இயந்திர உலகத்தில சில தீய பழக்கங்கள்-ல ஈடுபட்டு ...அதுவும் சூழ்நிலைகளினால் மட்டும் இல்லாம தானாவே தண்டவாளத்துல தலைய விடுற மாதிரி தெரிந்தே..படிதவர்களே.. பந்தாவுக்காகவோ..அல்ல நட்புக்காகவோ..இல்ல சும்மா எப்டி இருக்கு-னு டிரை பண்ணி பாப்போம்-னு பல தீய பழக்கங்களுக்கு வாழ்க்கைல வரவேற்பு கொடுக்குறாங்க.
ஏன்டா இப்படி கெட்டவனா மாறிட்ட-னு கேட்டா...அதுக்கும் ஒரு பதில் இருக்கு அவங்க கிட்ட....
தண்ணி..தம்..அடிச்ச கெட்டவனா..னு கேக்குறாங்க..
..
கேரக்டர பாத்து நல்வங்களா கெட்டவங்களானு சொல்லனும்னா..இந்த உலகத்துல யாருமே கெட்டவங்க இல்ல...ஏனா..இராவணன் ட்ட கூட சில நல்ல குணங்கள் இருந்தது..
ஆமாங்க என்ன பொறுத்த வர தண்ணி தம் அடிச்சா கெட்டவங்கதான்..ஒகே..உங்களுக்கு கஷ்டமா இருந்தா கெட்ட பழக்கம் உள்ளவங்க னு சொல்லிக்கலாம்.
அதும் உடலுக்கும் ஊருக்கும் தீங்கு விளைவிக்குற இந்த இழிவான செயல்கள உங்க சொந்த காசையே கொடுத்து உள்ளம் மகிழ்ந்து உள்வாங்கும் போது...உலகத்த நாசபாதையில கொண்டு போய்ட்டு இருக்கோம்னு உங்களுக்கு உறுத்தலயா..உங்கள பாத்துதான் உங்க அடுத்த தலைமுறையும் வளரும்-னு உங்களுக்கு தெரியாதா..?
இதுல கொடும என்னானா...ஆண்கள விட பெண்கள் மிஞ்சிருவாங்க போல..அதயும் டிரை பண்ணிற்கேன் இதையும் டிரை பண்ணிற்கேன்..காட் வோட்காவும் டிரை பண்ணிர்கேன்-னு பெரும வேற..எல்லாத்தையும் யாரு வேணாம் டிரை பண்ணலாம்...அதுல பெரும கொண்டாட அவசியம் இல்ல..சில சந்தர்ப்ப சூழ்நிலையில் கூட நான் இது மாறியான தீய செயல்களுக்கு சிறு கடுகளவு கூட இடம் கொடுக்கல-னு யாராவது இங்க இருந்தா நீங்க தாங்க ரியல் கீரோ..
ஒரே ஒரு முறை தானு தொடங்குகிற பழக்கங்கள் தான் ..ஒரு மாதத்திற்கு ஒரு முறை..வாரத்திற்கு ஒருமுறை..நாளுக்கு ஒருமுறை னு சுருங்கிக்கொண்டே வந்து உங்க வாழ்நாளையும் சுருக்கிறது..
ஒருதுளி விசமா இருந்தாலும் விசம் விசம்தானே..
ஆமாங்க..சும்மா என்ன இருக்குனு இறங்குறதுதான் உங்கள குழிக்குள்ள இறக்கி விட்டுறும்..இயற்கையாகவே மனித மனம், நாம் எது வேண்டாம்-னு சொல்றோமோ அத தான் வேண்டும் வேண்டும்-னு சொல்லும்.வாழ்க்கையில வளர வேண்டும்னா..அந்த மனதினுடைய கெட்ட பசிக்கு தீனி போடுவதை தவிர்க்க பழகவேண்டும்.பழகவேண்டும் அல்ல தவிர்கனும் இல்லைனா வாழ்க்கை தரிசா போய்றும்.அதுக்கு ஒரு தடவ தீனி போட்டா மீண்டும் மீண்டும் கேட்டுடேதான் இருக்கும்.
இங்க கெட்ட பசிங்கறது மது,மாது,புகையிலை,காம உணர்வு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.ஏன் பொரணி கேட்டல் கூட கெட்ட பசிதான்..ஏனா..வளர நினைப்பவர்கள்,உயர நினைப்பவர்கள் தன்னைபற்றிய ஆராய்ச்சியில் இறங்குவார்களே தவிர,மற்றவர்கள் பற்றி பொரணி பேசியே நேரத்தை செலவிடமாட்டார்கள்.ஆகையால் பிறரைப்பற்றிய பரபரப்பான அல்லது கிலுகிலுப்பான செய்திகளுக்கு ஏங்குகிற ஒரு மனோவியாதியில்(மன்னிக்கவும் ஆனால் அதுதான் உண்மை) இருந்து விடுபட்டு வாழப்பழகுங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை கடைபிடித்து வாழுகிற அளவுக்கு நல்ல மனிதராக வாழ முயற்சி செய்யுங்கள்.பெண்களே மது அருந்தாதீர்கள்..மது அருந்தும் ஆண்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
அடுத்த தலைமுறைக்கு நல்லகலாச்சாரத்தை கடத்த வேண்டிய அல்ல அல்ல கற்றுத்தர வேண்டிய கடமை இந்த தலைமுறையிடமே இருக்கிறது என்பதை இதயத்திலிருந்து இறக்கி வைத்திவிடாதீர்கள் இளைங்கர்களே..
Thank you
ReplyDelete