புகழ்வது தவறு..!
என்னடா...புகழ்வது எப்படி தவறாகும் அப்டினு கேட்கலாம்.
ஆமங்க,தேவையில்லாம ஒருவரை அளவுக்கு மீறி புகழ்வதால உங்களுக்கு என்ன கிடைக்கபோகுது.ஒரு அரசியல் தலைவரையோ,மதகுருவயோ,நடிகரையோ, அவர் அப்படி..இவர் இப்படி ..அப்படி இப்படினு ஏதேதோ சொல்லி புகழ்வது தேவையில்லாதது.எதுக்குனே தெரியாம சிலர் விதவிதமாக புகழ்ந்துட்டு இருப்பாங்க..இல்லைனா,யார பத்தியாவது குறை சொல்லிட்டு இருப்பாங்க
பெரியோரை புகழ்தலும் இளமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இளமே..
என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே புறநானூறு ல அற்புதமா சொல்லிருக்கிறது.
புகழ்தல் தவறு.இகழ்தலும் தவறு.ஒருவரை புரிந்துகொள்வதுதான் நன்று.அவரின் வெற்றிக்கான காரணங்களை தேடிக்கண்டறிவது,அதை உணர்ந்து அதன்மேல் ஈடுபாடு கொண்டு முழுவதுமாக அறிவது தவறன்று..அதையே அளவுக்கு மீறி ஒருவரிடன் கூறி புகழ்வது தவறு.மதிப்பது வேறு,புகழ்வது வேறு.மதிப்பது மிகவும் அவசியமான ஒன்று.ஒருவர் மீது மதித்து உயர்வான எண்ணம் வைப்பது தவறன்று.வெறும் வார்த்தைகளை கொண்டு வாரி இறைப்பது தவறு.அவர் சொன்னவற்றை மதித்து கடைபிடித்து நன்நெறியில் வாழ்வது வழிபடதக்கது
பராட்டுங்கள்...ஊக்கப்படுத்துங்கள்..உற்சாகப்படுத்துங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை...ஒரேடியாக காற்று வாக்கில் காதுக்கு வந்த..நம்பகரமில்லாதா,உறுதியில்லாத,தேவையில்லாத அலங்கார சொற்களை சொல்லி.. சொன்னதையே சொல்லி புகழ்ந்து உங்கள் நேரத்தை ..உங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிடாதிர்கள்..
Very nice and true
ReplyDelete