தமிழ்மொழி என் தாய்மொழி


என் இரு இதழ் கதவுகள்
திறந்து வந்த
முதல் ஒலி!
முத்துப்பற்கள் சிந்திய
முதல் மொழி!
செழுமை வாய்ந்த
செம்மொழி!
என் தாய்மொழி!
தமிழ்மொழி!

பாவகை பரவிய
பாற்குடம்!
ஆனந்த கவிதையின்
ஆலயம்!
கருத்துகளின் கருவூலம்
காதுகளை கௌரவிக்கும்!
மனதை மயக்கும்
அறுசுவை!
மானிடரை அதிரவைக்கும்
இசைக்கவை!
எங்கும் எதுகை மோனை!
எதிலும் தளராத யானை!
தாகம் தணிக்கும் நீர்ப்பானை!
தனித்து திகழும் தமிழோ..
ஒரு அழகிய வீணை!

பொதுமொழி,
மனக்கருத்தை மற்றவர்க்கு
அறிவிக்கும் தூது!
தமிழ்மொழி,
கனிமங்களை தூய்மைசெய்து
கிடைக்கும் தாது!

வார்த்தைகளால் வருடும்
கொஞ்சம்!
இனிமைக்கு இல்லை
பஞ்சம்!
இதனால் உருகும் பலர்
நெஞ்சம்!

தமிழ்மொழி தாயகத்தின்
அரிமா!
வார்த்தைகளால் தொடுத்த
முத்துச்சரமா!
இது இயற்கையின்
வரமா!
இனியொருமொழி இதுபோல்
வருமா!
இனிக்கும் இன்பம்
தருமா!

மார்தட்டு மாளுவோம் தமிழ னென்று
வேறின்பம் எமக்கு உண்டோ யிங்கு!
தமிழர்களே!
தமிழைக் காப்போம்! தமிழே!
அமிழ்தம்! அமிழ்தமென ஆடிப்பாடி மகிழ்வோம்!

(:- நம்மொழியாம் செம்மொழி நான்பெற்ற பெறும்பேறன்றோ!..
ஆதியந்தமுமாய் அமைந்த அருந்தவமொழி இங்குண்டெனும்போது
ஆர்ப்பரிக்கும் அன்னிய மொழிதாவல் நன்றன்றோ?!)

அன்னியமொழிகளை வெறுக்க
வேண்டாம் - அதற்காக
தாய்மொழி தமிழை மறக்க வேண்டாம்.

Comments

  1. கொங்கு தமிழை கொஞ்சம் கொஞ்சி பேசும் வழக்கு இணைத்து கொள்ளாவும்

    ReplyDelete
  2. தமிழின் சுவையை அறிந்தேன் உன் இனிய கவிதையிலே ☺☺

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பொங்கல் நினைவுகள்

களவும் கற்று மற என்பது தவறு

இருளிலும் ஒளி வீசு