சமுதாய ஏணிகள்..!
மாணாக்கர் நலமே
நாட்டின் வளம்!
ஆசிரியர்கள் இல்லையேல்
ஏது பலம்?
அகிலத்தை அறியச்செய்த ஆசான்களின் இதயத்தில் இன்பத்தை இயற்ற என் சிந்தையில் முகிழ்த்த சில சந்தங்கள்...🎶
வெளிச்சம் காணாத
விதை முளைகள் நாங்கள்!
அறியாமை இருளை
அகற்றவந்த சூரியகதிர் நீங்கள்!
ஆசிரியர்கள் என்பவர்கள்
கலப்பை போன்றவர்கள்..!
மண்ணுக்குள் புதைந்தாலும்
மகத்தானதாகிறது கலப்பை - அதுபோல
ஆசிரியர்கள் மறைந்தாலும்
மணிமகுடம் சூடவேண்டியவர்கள்..!
ஒழுக்கத்தை போதித்த
உத்தமர்கள்..!
கடமையைக் கற்றுத்தந்த
கண்ணுக்குத் தெரியும்
கடவுள்கள்..!
இளைய தலைமுறையின்
வளர்ச்சிப்பாதையிலுள்ள
படிகற்கள்..!
புதிய தலைமுறையின்
சிறகுகளை விரிக்கச்செய்து
வானளாவிய வெற்றிகளை
பெறச்செய்பவர்கள்..!
வருங்காலம் வறுமையில்
வாடுவதை தவிர்க்க
நிகழ்கால நெல்மணிகளை
வளர்ப்பவர்கள்..!
சுயநலமின்றி தோள்கொடுத்து
துணை நிற்பவர்கள்..!
சேவையைத் முதற்கடமையாகக்
செய்யும் சமுதாய ஏணிகள்..!
அவர்களது மகத்தான ஆசியர் பணிக்கு நாம் என்ன கைமாறு செய்வோம்...நாம் வாழ்வில் பல வெற்றிகள் பெற்று அவர்களுக்கு மரியாதை செய்வதை விட.....
பொறுப்புமிக்க ஆசிரியர்
பணியைப் போற்றுவோம்..!
சிறப்புமிக்க நாளைய
சான்றோர்களாய் உருவாவோம்..!
Nice lines.. Continue to blog
ReplyDelete